ஒரு நாள் சிறை கைதியா இருக்க ரூ 500 கர்நாடகா திட்டம்
அட்மின் மீடியா
0
கர்நாடக மாநிலம் ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலையில் விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வது போல் ரூ.500 கட்டணம் செலுத்தி, ஒரு நாள் முழுவதும் சிறைச்சாலையில் தங்கி, சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதை அமல்படுத்த மாநில அரசின் அனுமதிக்கு சிறை நிர்வாகம் திட்டத்தை அனுப்பி வைத்து உள்ளது.
இங்கு வருபவர்களுக்கு கைதியின் சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் சிறையில், கைதிகள் நடத்தப்படுவதை போன்றே பார்வையாளர்கள் நடத்தப்படுவார்கள். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே, பார்வையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிகின்றது
Tags: இந்திய செய்திகள்
