45 நாட்கள் மானியத்துடன் மத்திய அரசு சான்றிதழுடன் கல்வி அடுத்து வேலை.. !
மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் மூலம் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடையவர்களுக்கு பின்னலாடை நிறுவனங்களில் 45 நாட்களில் மானியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அங்கு பயிற்ச்சி முடித்தவர்களுக்கு கட்டாய வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
எனவே 18 வயது நிரம்பிய வேலை இல்லாத யாராக இருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் 45 நாட்களில் பின்னலாடை தொழிலை கற்று மத்திய அரசின் சான்றுடன் கட்டாய வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம்.
செக்கிங், டெய்லர், ஓவர்லாக், பிளாட்லாக் மெஷின் ஆபரேட்டர், சூயிங் மெஷின் மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
புதியவர்களுக்கு மொத்தம்300 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு:-
https://samarth-textiles.gov.in/
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு வேலைவாய்ப்பு