இந்தியாவிலிருந்து அபுதாபி வருபவர்களுக்கு 12 நாள் குவாரண்டைன் கட்டாயம்..!
அட்மின் மீடியா
0
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு 12 நாட்கள் தனிமை!இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அபுதாபிக்கு வந்தவுடன் அவர்கள் கட்டாயமாக 12 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எதிகாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள், அபுதாபி விமான நிலையத்திற்கு வந்ததும் கட்டாயமாக அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
மேலும், விமான நிலையத்தில் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கைப்பட்டைகள் அணிவிக்கப்படுகிறது.
அதன் பிறகு அவர்கள் 12 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.இந்த 12 நாட்களில் அவர்கள், 6வது நாளில் ஒரு பி.சி.ஆர். பரிசோதனையையும், 11வது நாளில் மற்றுமொரு பி.சி.ஆர். பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என்று தெரிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்