Breaking News

ஹைதி நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

அட்மின் மீடியா
0

வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி. இங்கு நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானது. 



ஹைதி தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான லெஸ் கெயெஸ் கடும் சேதத்திற்கு ஆளானது.வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். நகரம் முழுதும் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. அங்கு, 860க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்தன; 700க்கும் மேலானவை கடும் சேதம் அடைந்தன

இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2800க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

உங்கள் மனதை பதறவைக்கும் நிலநடுக்க வீடியோக்கள் பார்க்க:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this