Breaking News

ஹைட்டி தீவில் நிலநடுக்கம் இடிந்து விழுந்த கட்டிடங்கள் லைவ் வீடியோ

அட்மின் மீடியா
0

ஹைட்டி தீவில் நிலநடுக்கம் ரிக்டார் அளவில் 7.2 ஆக பதிவு.கட்டிடங்கள் பல சேதமடைந்தாக தகவல்.


கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவானது. 

இந்த நிலநடுக்கம் ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


https://twitter.com/TaylorJuvelle/status/1426534896713994244







 

 

 

 

 

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback