பெற்றோர்களே எச்சரிக்கை:- பப்ஜி விளையாட பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்தை எடுத்த சிறுவன்
அட்மின் மீடியா
0
பப்ஜி விளையாடி அம்மா வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் இழந்த சிறுவன்- தந்தை திட்டியதால் வீட்டிலிருந்து ஓட்டம்
மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாகசெல்போனில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.
மேலும் பப்ஜி விளையாட்டில் அடையாள அட்டை பெறுவதற்கும், விர்ச்சுவல் கரண்சி
,ரிடீம் பாயிண்ட் பெறுவதற்காகவும் அம்மாவின் வங்கிக் கணக்கை பயன்படுத்தியுள்ளார்
அம்மாவின் வங்கி கணக்கில் இருந்து சிறுக சிறுக 10 லட்ச ரூபாயை பப்ஜி விளையாட்டில்
இழந்துள்ளான். இந்த விவகாரம், அவனது பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவனை கடுமையாக திட்டி அவரை கண்டித்துள்ளனர். இதனால் சிறுவன் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வீட்டைவிட்டு ஓடிச் சென்ற சிறுவனைக் கண்டுபிடித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Tags: இந்திய செய்திகள்