புதுச்சேரியில் செப். 1-ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
அட்மின் மீடியா
0
புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்தாண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் தற்போது கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் முடிவில்
புதுச்சேரியில் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் அதே போல் 9 ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளும் தொடங்கப்படும் எனவும் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்
