Breaking News

BREAKING: இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது -ஒன்றியஅரசு திட்டவட்டம்..!

அட்மின் மீடியா
0

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.



திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள், கடந்த 2019-ம் ஆண்டு தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்தார்கள். 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும், குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், புதிதாக விண்ணப்பம் செய்யவும், அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்ற கிளையில், மத்திய அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். ஆகவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் " என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback