தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு...! முழு விவரம்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், உணவகம், பேக்கரி, தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை (புதுச்சேரி நீங்கலாக)
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை
திரையரங்குகள் திறக்க தடை
மதுக்கூடங்கள் திறக்க தடை
நீச்சல் குளங்கள் திறக்க தடை
பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் .நடத்த தடை
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை
உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றிற்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு
https://drive.google.com/file/d/1lBDj_nC40Qx_SQlhpHGz_umEuttOthZG/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்