திமுகவில் இணைந்தார் ம.நீ.ம. மகேந்திரன்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி
அடைந்ததை அடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில்
இருந்து அதிரடியாக விலகினார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகினார்
அவர் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடதக்கது
Tags: தமிழக செய்திகள்