தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக அப்துல் ரகுமான் தேர்வு
சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் நேற்று வக்ஃபு வாரிய கூட்டம் நடைபெற்றது அதில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, கூட்டணி கட்சியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம். அப்துல்ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் உறுப்பினர்களாக முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் மகள் பாத்திமா முசப்பர் , அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன், சன்னி உலாமாக்கள் மற்றும் ஷ்யா உலாமாக்கள் பிரிவில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இருந்த அன்வர் ராஜா எம்..பி. இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு (2020) முடிவடைந்ததும், வக்பு வாரியத்துக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்காமல், வக்பு வாரிய உறுப்பினர்கள் உள்பட அனைவரையம் அதிமுக அரசு கலைத்து விட்டது. இதனால், வக்பு வாரிய தலைவர் பதவி காலியாக இருந்தது குறிப்பிடதக்கது
Tags: தமிழக செய்திகள்
