ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் இருப்பதால் புகார் தெரிவிக்க புகார் புத்தகம் மூலம் புகார் செய்ய செய்ய வழி வகை செய்யவேண்டும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இணையவழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையோடு புகார் பதிவேட்டையும் பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்