நடைபயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை: சிசிடிவி வீடியோ
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாகபணியாற்றும் உத்தர் ஆனந்த் என்பவர் நேற்று காலையில் நடைப்பயிற்சி சென்றுள்ளார்.
அப்போது அவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடிப்பட்டவர் யார் என்று தெரியாத நிலையில் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.
நடைபயிற்ச்சிக்கு சென்றவர் வீடுதிரும்பாததால் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
விசாரனையில் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடலைக் காட்டியுள்ளனர் காவல்துறைனர். அப்போது, நீதிபதியின் குடும்பத்தினரால் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
நீதிபதி விபத்துக்குள்ளான இடத்திலிருந்த சி.சி.டிவி காட்சிகளைப் பார்க்கும்போது, வேண்டுமென்ற வாகனத்தைக் கொண்டு இடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
அதன் வீடியோ
https://twitter.com/nalinisharma_/status/1420401168992268290Additional District & Sessions Judge, Dhanbad Uttam Anand gets run over during his morning walk under suspicious circumstances. The judge was dealing with a few high-profile murder cases from the area and had recently rejected bail petitions of a few criminals. TRIGGER WARNING pic.twitter.com/FFia9usXQc
— Nalini (@nalinisharma_) July 28, 2021
Tags: இந்திய செய்திகள்

