Breaking News

உங்கள் மொபைல் போனை சிசிடிவி கேமராவாக மாற்றுவது எப்படி?

அட்மின் மீடியா
0

உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் உங்கள் மொபைல் போனை நீங்கள் சிசிடிவி கேமரா போல் பயன்படுத்தலாம் அதற்காகவே தனியாக பிளேஸ்டோரில் ஆப் உள்ளது ஆம் ஆல்ஃபிரட் ஹோம் செக்யூரிட்டி கேமரா

 


பயன்படுத்துவது எப்படி? 

நீங்கள் எந்த போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த ஸ்மார்ட்போனில்  பிளேஸ்டோருக்கு சென்று https://play.google.com/store/apps/details?id=com.ivuu  இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்க

அடுத்து அந்த ஆப் Setup this device as: என்பதில் Camera என்பதை தெரிவு செய்து “Next” பட்டனை அழுத்தி அதில் Sign in with Google பட்டனை அழுத்தி உங்களது கூகுள் கணக்கை தேர்வு செய்யுங்க.

அடுத்து அதே போல் எந்த போனில் நீங்கள் கண்காணிக்க விரும்புகின்றீர்களோ அந்த  ஸ்மார்ட் போனிலும் அதே ஆப்பை இன்ஸ்டால் செய்து  செட்டிங் ஆப்சனில்  Viewer என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்

அடுத்து இந்த போனிலும் அதே கூகுள் கணக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்

நீங்கள் செக்யூரிட்டி கேமராவாக பயன்படுத்த விரும்பும் சாதனம் இந்த ஆப்-இல் காண்பிக்கப்படும். 

அதனை அழுத்துவதன் மூலம் முன்னைய போனின் கேமரா மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை கண்காணிக்கலாம்.

மேலும் நீங்கள் கம்பியூட்டர் மூலம் கண்காணிக்க விரும்பினால் https://alfred.computer/ எனும் முகவரிக்கு சென்று நீங்கள் அதே கூகுள் கணக்கை பயன்படுத்தி உள் நுழைந்து கண்காணிக்கலாம்

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback