Breaking News

மாணவர்கள் நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் பள்ளிக்கல்வித் துறை

அட்மின் மீடியா
0

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

கடந்த 16ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை தற்பொழுது ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback