தமிழகம் முழுவதும் இன்று முதல் நூலகங்களை திறக்க உத்தரவு
இன்று முதல் தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க உத்தரவுநூலகம் திறக்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் இன்று முதல் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை தவிர்த்து பிற நூலகங்களை திறக்கலாம்.
15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை
தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேசைகள், நூற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே மறுநாள் வாசகர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும்.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள், நூலகப் பணியாளர்கள் முகக்கவசம், கைகளை சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே நூலகத்திற்குள் அனுமதித்தல் வேண்டும்.
நூலக நுழைவு வாயிலில் வாசகர்கள் கைகளை சுத்தம் செய்திட சோப் மற்றும் தண்ணீர் அல்லது கிருமி நாசினி திரவம் வைத்திருக்க வேண்டும்
நூலகத்திற்கு வரும் வாசகர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களையும் வெப்பபானி கொண்டு சோதித்த பின்பே நூலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்



