நெல்லை வணக்கம் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிதாக வாட்ஸ்அப் எண் அறிமுகம்
அட்மின் மீடியா
0
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை 24 மணி நேரமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கும் வகையில் நெல்லை வணக்கம் 9786 566111 என்ற புதிய செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் உடனடியாக அந்தந்த துறை தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படும். பொதுமக்களுக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்