Breaking News

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கொரானா ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் வருகின்ற 1வரும் 19-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று காலை 11 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், மருத்துவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

ஊரடங்கு தளர்வுகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நேரம் உயர்த்தப்படும் மற்றும் திருமணம் இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரையரங்குகள், மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை கட்டுப்பாடுகளுடன் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


Tags: தமிழக செய்திகள்

Share this