ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் – ஆன்லைன் & ஆஃப்லைன்!
ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் – ஆன்லைன் & ஆஃப்லைன்!
முதலில் ஆதாரின் அதிகாரபூர்வ வலைத்தளமான https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
அடுத்து அதில் update demographics data online என்பதை கிளிக் செய்து அதில் ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும். பின் Send OTP என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ பதிவு செய்ய வேண்டும்.
அடுத்து அதில் வரும் ஆப்ஷனில் மொபைல் எண் என்பதை கிளிக் செய்து புதிய மொபைல் எண்ணை பதிவு செய்து அதில் உள்ள கேப்சாவை பதிவு செய்ய வேண்டும். பின் நீங்கள் புதுப்பிக்க நினைக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும் அதனை பதிவு செய்ய வேண்டும்,
இதனை தொடர்ந்து ஆதார் புதுப்பிப்பு கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண் விரைவில் புதுப்பிக்கப்படும் அவ்வளவுதான்
ஆஃப்லைன் மூலம் ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண் புதுப்பிக்க
அருகில் உள்ள ஆதார் மையம், அல்லது இ சேவை மையம் சென்று எந்த ஒரு ஆவணமும் இன்றி உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து கொள்ள இயலும்.
Tags: முக்கிய செய்தி