வங்கி கணக்கு முடக்கபடும் என போனுக்கு வரும் மெசஜை கிளிக் செய்யாதீங்க: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக வங்கி கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பல்கள் பெருகியுள்ளன.
வங்கி மூலமாக அனுப்பப்படுவது போல் ஒரு லிங்க் மெசெஜ் அனைத்து செல்போன் எண்ணிற்கும் அண்மைக்காலமாக வருகிறது. அந்த மெசேஜில் இந்த லிங்கை 10 நிமிடத்திற்குள் அழுத்தி உங்களது ஆதார் பான் விவரங்களை பதிவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை நம்பி பொதுமக்கள் பலர் அந்த லிங்க் மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்வதாகவும் , அந்த சமயத்தில் அதாவது 2 அல்லது 3 நிமிடங்களில் குறிப்பிட்ட வங்கி கணக்கின் தனிப்பட்ட விவரங்களை மோசடி கும்பல் திருடி உடனடியாக ஏடிஎம் மூலமாகவும் , ஷாப்பிங் மூலமாகவும் பணத்தை திருடி வருகின்றனர் .
இது போல் வரக்கூடிய மெசேஜை பொதுமக்கள் நம்பவேண்டாம் எனவும் வங்கியிலிருந்து இது போன்ற மெசேஜ் அனுப்பமாட்டார்கள் எனவே இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் எனசென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர் .
Tags: எச்சரிக்கை செய்தி