அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்" - ஓபிஎஸ் அறிவிப்பு....!
அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பாரதீய ஜனதா கட்சி மீதும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கையினை வைத்துள்ளது.
தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதீய ஜனதா கட்சி கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை."என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. pic.twitter.com/R1lRtK822e
— O Panneerselvam (@OfficeOfOPS) July 7, 2021
Tags: தமிழக செய்திகள்