இன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச கொரோனா தடுப்பூசி
தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர்.
கொரானா தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ் 780 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் 1410 ரூபாய்க்கும் செலுத்தப்பட்டு வருகின்றது
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் நடைமுறையில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட விலையில் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பு ஊசி செலுத்துவதற்கு என்ற ஒரு பிரிவு இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
