மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்
அட்மின் மீடியா
0
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 13 கட்சிகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானம் 1:
காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 2:
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும்
தீர்மானம் 3:
அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானத்தை டெல்லிக்கு சென்று ஒன்றிய அரசிடம் கூட்டாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்பட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்


