தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன், கால்நடை துறைக்கு இணையமைச்சரானார் எல்.முருகன்!
தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இதில், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில், 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
தமிழக பாஜக தலைவரான எல்.முருகனுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை 6 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது. எல். முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்து வந்தார்.
எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சராகவும் அவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துறை பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா கூட்டுறவுத்துறையையும் கூடுதலாக கவனிப்பார்
எல்.முருகன் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சராகவும் அவர் செயல்படுவார்
தர்மேந்திரப் பிரதான் கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையும்,
பியூஷ் கோயல் ஜவுளி மற்றும் நுகர்வோர் நலத்துறை
ஸ்மிருதிராணி பெண்கள் குழந்தைகள் நலத்துறை மற்றும் தூய்மை இந்தியா திட்டம்
மன்சுக் மாண்டவியா சுகாதாரம் மற்றும் உரம்,
ஹர்தீப் சிங் புரி ரசாயனத்துறையும், பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை க்கும்,
அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு
ஜோதிராந்தித்ய சிந்தியா விமான போக்குவரத்துறை ஒதுக்கீடு
Tags: இந்திய செய்திகள்