Breaking News

மாஸ்க் போட்டா போதும் 90 நிமிடத்தில் உங்களுக்கு கொரானா இருக்கா இல்லையா தெரிந்துவிடும் புதிய மாஸ்க் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள்  கொரானாவை கண்டுபிடிக்கும் நவீன முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முகக்கவசம் அணிந்து கொண்டால் போதும்  90 நிமிடங்களில் உங்கள்  சுவாசம் மூலமாக கொரோனா இருப்பதை அறிந்துகொள்ள முடியும் எனவும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை போன்று இதுவும்  துல்லியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். 

மேலும், அந்த மாஸ்க்கை உங்களுடைய ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால், அதில் உங்களுடைய முடிவுகளை எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர். 

இந்த பரிசோதனை முடிவு ஆர்.டி.பி.சி.ஆர். முடிவை போல துல்லியமாக இருப்பதாகவும், விலை மலிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE:

https://scitechdaily.com/mit-and-harvard-engineers-create-new-face-mask-that-can-detect-covid-19-infection/

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this