ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 16 பேர் பலி
ராஜஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 7 சிறுவா்கள் உள்பட 16 போ பலியாகினா் 6 சிறாா்கள் உள்பட 21 பேர் காயமடைந்தனா். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜெய்ப்பூர் அருகே சுற்றுலா தலமான அமர் அரண்மனையின் கண்காணிப்பு கோபுரத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் மழையை ரசித்த வண்ணம் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளது. இதில் 7 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 17 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது போல் கோடா, ஜலாவர், பரண் என்ற பகுதிகளில் மின்னல் தாக்கி 6 பேர் பலியாகினர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார் .
Tags: இந்திய செய்திகள்