Breaking News

FACT CHECK: கோழி கறி மூலம் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது என பரவும் வதந்தியை யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதால் குறைந்தவிலையில் விற்றாலும் வாங்காதீர்கள் என ஒரு கோழி புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த தகவல் தவறானது ஆகும்

கடந்த சிலநாட்களுக்கு முன்பு  இதே போல் ஆட்டுஆட்டு இறைச்சி மூலம் கருப்பு பூஞ்சை பரவும் என்று பொய்யான ஒரு செய்தியினை பரப்பினார்கள், அதேபோல் தற்போது கோழிகறிமூலம் கருப்பு பூஞ்சை பரவுகின்றது என வதந்தி பரப்புகின்றார்கள்


முதலில் ஒன்றை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் கருப்பு பூஞ்சை என்பது கொரானாபோல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் கிடையாது

கருப்பு பூஞ்சை நோய் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து அதிகம் உட்கொள்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் வருகின்றது. 

ஆனால் மட்டன் சாப்பிட்டால் வரும், சிக்கன் சாப்பிட்டால் வரும் என்பது எல்லாம் சுத்த பொய்யான தகவல் ஆகும்

ஊரடங்கில் கறி விலை ஏறிவிட்டது என்று யாரோ பொய்யாக கிளப்பிவிட்ட வதந்தி தான் அது

இது போல் தான் கடந்த ஆண்டும் கோழி கறி மூலம் கொரானா பரவுகின்றது என பொய்யாக பரப்பினார்கள் 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன? அரசு வழிகாட்டுதல் வெளியீடு!



அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


கருப்புப்பூஞ்சை  மனிதனைத் தாக்குவது எப்படி?அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் வராமல் காக்கும் முறைகள் பற்றி விவரிக்கின்றார் மருத்துவர் நிலோபர் நிஷா 


 அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback