Breaking News

BREAKING அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

அட்மின் மீடியா
0

தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது



அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட  புகைபடங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் 

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்த முன்ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது  இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்களை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளார்கள்.

அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback