Breaking News

BREAKING NEWS: தலைமறைவாக இருந்த யூ டியூப்பர் பப்ஜி மதன் அதிரடி கைது

அட்மின் மீடியா
0

யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 


யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்த மதன் பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதன் தலைமறைவானான். நேற்று மதனின் அப்பா மற்றும் அவரின் சகோதரர் சம்பத் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். மதனின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். இதில் மதன் தர்மபுரிக்கு சென்று இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.

 இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த சென்னை சைபர் கிரைம் போலீஸ் மதனை தருமபுரியில் வைத்து கைது செய்தது. இன்றே இவர் சென்னை கொண்டு வரப்பட உள்ளான்.

நேற்று முன் தினம் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback