பெற்றோர்களே எச்சரிக்கை: யார் இந்த மதன்.. ஆன்லைன் கேமில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசப் பேச்சு!'- யூடியூபர் மதனுக்கு சம்மன்
அட்மின் மீடியா
0
யூட்யூபில் மதன் எனும் சேனல் வைத்திருப்பவர் தான் மதன். இவரின் சேனலில் பப்ஜி, ஜிடிஏ ஆகிய கேம்களை லைவ் போட்டு ஆன்லைனில் விளையாடிக்கொண்டே கேமின் நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்து வந்திருக்கிறார் இளைஞர் மதன்.
அதனால் மதனின் அந்த யூ-டியூப் சேனலை ஏராளமான சிறுவர், சிறுமிகள் பார்க்கத் தொடங்கினர். அதனால் யூ-டியூப் சேனலுக்கு வருமானம் அதிகரித்திருக்கிறது
மதனுடன் சேர்ந்து விளையாடுவதற்கு சில ஆண்களும் பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்போது தன்னுடன் சேர்ந்து விளையாடுபவர்களை ஆபாச வார்த்தைகள் மூலம் திட்டுவது வழக்கமாக வைத்துள்ளார்
இப்படி ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைக்கும் மதன், உடனே அவர்களை இன்ஸ்டா பக்கத்திற்கு வரச்சொல்லி ஆடையில்லாமல் இரவில் வீடியோ சார்ட் செய்யலாம் என அழைக்கும் வீடியோக்களும் இணையத்தில உலா வருகின்றன.
இதுகுறித்து சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலும் முதல்வர் தனிப்பிரிவிலும் புகாரளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக டிவிட்டர், பேஸ்புக், கிளப் ஹவுஸ், வாட்ஸப் , யூடியூப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் மதன் குறித்து விவாதங்கள் நடந்துவருகின்றது.
இந்நிலையில் சைபர் கிரைம் போலிஸார் மதனை நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
