ஹிஜாப் ஒரு தடை அல்ல :பீகார் காவல்துறையில் டி.எஸ்.பி ஆன முதல் முஸ்லீம் பெண் ரசியா சுல்தானா,
பீகார் காவல்துறையில் டி.எஸ்.பி ஆன முதல் முஸ்லீம் பெண் ரசியா சுல்தானா,
பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவாவைச் சேர்ந்த ரசியா சுல்தான் தற்போது பீகார் அரசின் மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகின்ரார்
இது குறித்து பிரபல இந்தியா டுடே டிவியிடம் பேசிய ரசியா சுல்தானா
எனது குழந்தை பருவ கனவு நனவாகியது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்த ரசியா நான் ஒரு காவல்துறை அதிகாரியாக பணியாற்றுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மக்களுக்கு நீதி கிடைக்காத பல குற்றங்கள் உள்ளன, குறிப்பாக பெண்கள். பெண்கள் தங்களுக்கு எதிரான எந்தவொரு குற்றச் சம்பவமும் போலீசில் புகார் செய்வதிலிருந்து வெட்கப்படுகிறார்கள். இதுபோன்ற வழக்குகளை உறுதி செய்ய முயற்சிப்பேன் ரஷியா சுல்தான் கூறினார்.
முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெண் குழந்தைகள் மத்தியில், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற குழந்தைக்கு ஆதரவளிக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
புர்கா அல்லது ஹிஜாப் அணிவது ஒரு தடை அல்ல. நாங்கள் எந்த வேலையும் செய்ய முடியும் என்று நினைத்தால், எல்லா வகையான இடையூறுகளையும் சமாளிக்க அல்லாஹ் நமக்கு சக்தியைத் தருகிறான்" என்று ரசியா சுல்தான் கூறினார்
Source:
Tags: இந்திய செய்திகள்
