பாலியல் வழக்கில் சிவ சங்கர் பாபா டெல்லியில் கைது
பாலியல் வழக்கில் சிவ சங்கர் பாபா டெல்லியில் கைது டேராடூனில் இருந்து தப்பியோடிய நிலையில் டெல்லியில் கைது
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து விசாரணைக்காக டேராடூன் சென்றபோது தனியார் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் உத்தரகாண்ட், டெல்லியில் அம்மாநில போலீசாருடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வைத்து அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்ததாகவும் விரைவில் சென்னை அழைத்துவரப்பட உள்ளதாகவும் போலீசார் தகவல்கள் கூறுகின்றன.
Tags: தமிழக செய்திகள்
