தன்னீரில் கலந்து குடிக்கும் கொரானா மருந்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம் முழு விவரம்
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த அவசரப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
இந்த மருந்தை டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது.
இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் 2-deoxy-D-glucose 2-DG எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய்க்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG மருந்து சந்தையில் கடந்த 17 ம் தேதி முதல் வி முதல்விற்பனையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 DG கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு இந்தமருந்தை அதிகபட்சம் 10 நாட்கள் வரை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
நீரிழிவு, இதய நோய், சுவாச பிரச்சினை, கல்லீரல், சிறுநீரக கோளாறு உடையவர்களுக்கு இந்த மருந்தை தந்து பரிசோதிக்கவில்லை. எனவே இவர்களுக்கு இந்த மருந்தை பரிந்துரைக்கிறபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், இந்த மருந்தை தரக்கூடாது.
18 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கும் இந்த மருந்தை தரக்கூடாது.
மருந்தைப் பெற சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், ஐதராபாத் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீசை அணுக வேண்டும்.
மேலும் தகவலுக்கு 2DG@drreddys.com மெயில் அனுப்பவும்
மருந்து என்பது ஒரு சிறிய பாக்கெட்டில் உள்ள பவுடர் போல் உள்ள ஒரு தூள், அதை தண்ணீரில் கரைத்த பிறகு வாய்வழியாக உட்கொள்ள வேண்டும்.
2 டிஜி என்பது ஒரு பொதுவான மூலக்கூறு மற்றும் குளுக்கோஸின் அனலாக் ஆகும்,
வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் தேர்ந்தெடுப்பதன் மூலம் மருந்து செயல்படுகிறது மற்றும் வைரஸ் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது.
2DG மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது,
Source:
Tags: தமிழக செய்திகள்
