Breaking News

முழு ஊரடங்கில் என்ன என்ன தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டின் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.



அடுத்து அதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி முதல் வருகின்ற 7ம் தேதி வரை மீண்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. 

ஊரடங்கினால் கைமேல் பலனாக தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் 7 ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

என்னென்ன மாதிரியான விஷயங்களில் தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் ஸ்டாலின் அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Share this