Breaking News

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது -அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சிறு,குறு தொழிசாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் மே 31-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் அதனை ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது 

 


இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இனி மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு கிடையாது. என தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback