Breaking News

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுகொண்ட இந்தியர்கள் அமீரகம் வரலாமா? – துபாய் அரசு விளக்கம்..!

அட்மின் மீடியா
0
இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத்தடையை அமீரக அரசு நீக்கியுள்ளது. மேலும் 23 ம் தேதிமுதல் விமான போக்குவரத்தையும் துவக்கியுள்ளது


மேலும் COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் அளித்துள்ளது. அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,



பைசர் பையோ என்டெக் Pfizer-BioNTech

ஆக்ஸ்போர்டு  ஆஸ்ட்ரா ஜெனக்கா அல்லது கோவிஷீல்டு Oxford-AstraZeneca

சினோபார்ம் Sinopharm

ஸ்புட்னிக் Sputnik V


மேற்கண்ட  தடுப்பூசிகளில்  ஏதேனும் ஒரு தடுப்பூசி ஒன்றை பயணிகள் போட்டிருக்கவேண்டும்.

மேலும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிதான் தான் இந்தியாலில் கோவிட்சீல்ட் என்ற பெயரில் வழங்கபடுகிறது. எனவே இந்த 2 டோஸ் எடுத்தவர்கள் துபாய்க்கு வர முடியும். 

மேலும் தடுப்பூசி சான்றிதழில் அஸ்ட்ராஜெனிகா/கோவிட்சீல்ட் என்ற பதிவு செய்திருக்க வேண்டும் உடன் உங்கள் பாஸ்போர்ட் எண்ணும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

என துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது

Source:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this