இஸ்லாமியர்கள் என்பதால் வெறி: கனடாவில் லாரி ஏற்றி 4 பேரை துடி துடிக்க கொன்ற 20 வயது வாலிபர் கைது
இஸ்லாமியர்கள் என்பதால் வெறி: கனடாவில் லாரி ஏற்றி 4 பேரை துடி துடிக்க கொன்ற 20 வயது வாலிபர் கைது
கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம், ஹைட் பார்க் சாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று முன்தினம் இரவு 8.40 மணியளவில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த லாரி அந்த குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மீண்டும் அவர்கள் மீது லாரியை ஏற்றினார். இதில் அவர்கள் கார் சக்கரங்களில் சிக்கி நசுங்கினர்.
இந்த கோர சம்பவத்தில் பாகிஸ்தானிலிருந்து 14 வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த அந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 74 வயது பாட்டி, 46 வயது கணவர், 44 வயது மனைவி, அவர்களது மகளான 15 வயது பெண் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் படுகாயமடைந்த 9 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அவர்கள் மீது லாரி ஏற்றிய அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அதன்பின்பு போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், 6 கிமீ தொலைவில் ஒரு வணிக வளாகத்தில் பதுங்கி இருந்த அந்த வாலிபரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்,
அந்த வாலிபருக்கு வயது 20 தான் ஆகின்றது மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மதத்தின் காரணமாகவே வெறுப்புணர்வுடன் அந்த குடும்பத்தினர் மீது வேண்டும் என்றே லாரி ஏற்றி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளான்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,
இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ,
லண்டனில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் கனடா முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், இஸ்லாமிய வெறுப்புக்கு நமது நாட்டில் இடம் கிடையாது.கண்ணுக்குத் தெரியாமல் மெதுவாக பரவும் இந்த வெறுப்பு மோசமானது, இது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்
I’m horrified by the news from London, Ontario. To the loved ones of those who were terrorized by yesterday’s act of hatred, we are here for you. We are also here for the child who remains in hospital - our hearts go out to you, and you will be in our thoughts as you recover.
— Justin Trudeau (@JustinTrudeau) June 7, 2021
இந்த கொடூர கொலையில் உயிரிழந்தவர்களுக்கு கனடா நாட்டுமக்கள் விபத்து நடந்த அந்த இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்ரார்கள்
Heartbreaking. 💔💔💔#MuslimsLiveMatters#OurLondonFamily #Islamophobia
— Talat's updates🇵🇸🇵🇰 (@Talat_guardian) June 8, 2021
pic.twitter.com/Sr0bmHH55E
https://globalnews.ca/news/7928411/hyde-park-south-carriage-pedestrians-dead-london-ontario-police/
Tags: வெளிநாட்டு செய்திகள்