Breaking News

மாநிலம் முழுவதும் ஜூலை 31க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

ஜூலை 31க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில கல்வி வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


இந்நிலையில், மாநில பாடத்திட்ட சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், 12-ம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback