அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதன்படி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று (14.06.2021) கனமழை பெய்யும்.
மேலும் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம். திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை
Tags: தமிழக செய்திகள்
