Breaking News

இன்றுமுதல் ரேசன் கடைகளில் மளிகை தொகுப்புடன் ரூ.2,000 விநியோகம்

அட்மின் மீடியா
0

ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கான கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாயும், 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும், இன்று ஜூன் 15 முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.


முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக கொரானா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் அதில் முதல் தவனையாக உடனடியாக  ரூ. 2,000 வழங்கப்படும் என கையெழுத்திட்டார்

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும் தமிழக முதல்வரின் தந்தையுமான கருணாநிதி அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு  நாளை இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தொகையும், 14 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அதன்படி 

கோதுமை, 

ரவை, 

சர்க்கரை, 

உப்பு, 

புளி, 

மஞ்சள் தூள், 

கடுகு, 

பருப்பு, 

சீரகம், 

குளியல் சோப், 

சலவை சோப் 

உள்ளிட்ட 14 பொருட்கள்  வழங்கப்படும் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback