மரண தண்டனை விதித்த இந்தியரின் விடுதலைக்கு 1 கோடி ரூபாய் உதவி செய்த லூலூ தலைவர் யூசுப் அலி
அட்மின் மீடியா
0
இந்தியாவின் கேரளாவை சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 2012 ம் ஆண்டில் தனது காரை குழந்தைகள் குழுவில் மோதியதில் சூடான் நாட்டைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரக உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
அதன்பின்பு பெக்ஸ் கிருஷ்ணனின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் விடுதலையைப் பெற கடுமையாக முயற்சித்துள்ளனர். முடியாமல் போகவே பெக்ஸ் கிருஷ்ணன் குடும்பத்தினர் லூலூ தலைவர் யூசுப் அலியை அணுகியிருக்கின்றனர்.
அவர் வழக்கின் விவரங்களைப் பெற்று அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொண்டார். இறுதியில் 2021 ஜனவரியில், சூடானில் பாதிக்கப்பட்டவரின் குடும்பமானது கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து, அந்த நபரின் விடுதலையைப் பெறுவதற்காக யூசுப் அலி நீதிமன்றத்தில் 500,000 திர்ஹாம் (தோராயமாக ஒரு கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்கியுள்ளார்
இதனை அடுத்து பெக்ஸ் கிருஷ்ணனின் விடுதலை தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் ஜூன் 3 ஆம் தேதி நிறைவடைந்தன என்றும் அவர் விரைவில் கேரளாவிலுள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் லுலு குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
SOURCE:
Tags: வெளிநாட்டு செய்திகள்