Breaking News

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

அட்மின் மீடியா
0

 தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது



தமிழகத்தில் முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது.இதையடுத்து தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா  தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளும், கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள பிற மாவட்டங்களில் நேரக் கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அல்லது நாளை அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags: தமிழக செய்திகள்

Share this