Breaking News

உத்திரபிரதேசத்தில் 180 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த சோட்லால். இவரது நான்கு வயது சிறுவன் சிவா நேற்று காலை விளையாடிக்கொண்டிருந்தான்.  அப்போது  எதிர்பாராத விதமாக அங்கு மூடப்படாமல் இருந்த 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளான்180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 


இது தொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவையும் சிறுவனை மீட்க்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் இருந்த இடத்தை அறிந்த மீட்புக் குழுவினர், ஆக்ஸிஜன் கொடுத்தனர். குழாய் மூலம் குளுகோசும் வழங்கினர். மீட்புக் குழுவினர், 9  மணி நேரம் தொடர்ந்து போராடி சிறுவன் சிவாவை பத்திரமாக மீட்டனர். 

உடனடியாக சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback