Breaking News

FactCheck: பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று பரவும் செய்தி... உண்மை என்ன??

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  *இரண்டு வயதுள்ள ஒரு பெண் குழந்தையும், பிறந்து இரண்டு மாதமே ஆன ஆன் குழந்தை ஒன்றும் ஆதரவற்ற நிலையில்  உள்ளது.*

*இந்த குழந்தைகளின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள்.* 

*இந்த குழந்தைகளை குழந்தை இல்லாதவர்கள் எவரேனும் தத்ததெடுக்க விரும்பினால் 9718798777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்!...*

*தயவு செய்து இந்த செய்தியை பரவச்செய்யுங்கள் ஏதெனும் நல்ல உள்ளம் கொண்டவரும், குழந்தை தேவை உள்ளவர்களும் பார்த்து பயன் பெறட்டும்!...* 

*ஒரு சிறு பகிர்வு அந்த குழந்தைகளுக்கு வாழ்வை கொடுக்கும்!..என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது ஆகும்

நீங்கள் நல்ல எண்ணத்தில் தான் ஷேர் செய்கின்றீர்கள், ஆனால் அதில் உள்ள மொபைல் எண்ணுக்கும் போன் செய்து உண்மையா என விசாரித்து ஷேர் செய்தால் நல்லது

அதில் உள்ள மொபைல் எண் வேலைசெய்யவில்லை. 

மேலும் இந்த செய்தி இந்தி ஆங்கிலம் , தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் அந்த மாநிலங்களில் பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது

மேலும் அந்த நம்பரை ட்ரூ கால்ரில் செக் செய்த போது அது ஒரு spam எண் என சிகப்பு அலர்ட் வருகின்றது

சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு செய்தி வந்தால் அதன் உண்மை தன்மை தெரியாமல் ஷேர் செய்யாதீர்கள், நீங்கள் ஷேர் செய்யும் செய்தியில் போன் நம்பர் இருந்தால் அதனை தொடர்பு கொண்டு அந்த செய்தி உண்மையா, பொய்யா என தெரிந்து கொள்ளுங்கள் , நம் அனைவருக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback