FACT CHECK தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் முதல் பாளே சிக்ஸ் இதுதான். தமிழக தலைமை சட்ட ஒழுங்கு DGP யாக சைலேந்திரபாபு IPS அவர்கள் நியமனம் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மே 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று புதிய அரசு அமைய உள்ளது.
வெற்றிப் பெற்ற கட்சி இன்னும் பதவி ஏற்க்கவும் இல்லை, ஆட்சியில் வரவில்லை ஆட்சிப் பொறுப்பேற்காத நிலையில் எப்படி சைலேந்திரபாபுவை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து இருக்கும்...
பொதுவாக, ஆட்சி மாற்றம் ஏற்படும் போது காவல் அதிகாரிகள் உள்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகள் மாற்றப்படுவது இயற்க்கைதான்
ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்பில்லை.
தற்போது சைலேந்திரபாபு அவர்கள் ரயில்வே டிஜிபியாக உள்ளார்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
