FACT CHECK: பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக துருக்கி ராணுவம் வந்ததால் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தது என்று பரவும் வீடியோ ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் வந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த வீடியோவை ஷேர் செய்யும் பலரும் பாலஸ்தீனத்திற்க்கு வரும் துருக்கி ராணுவம் என்பது பொய்யானது ஆகும்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் துருக்கி ரானுவத்தினர்கள் கிடையாது, அவர்கள் பாலஸ்தீனத்திற்க்கும் வரவில்லை
அந்த வீடியோ சம்பவம் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் கடந்த 26.06.2020 அன்று நடந்தது ஆகும் அதாவது மாஸ்கோவில் நடந்த வெற்றி தின ராணுவ தளவாட அணிவகுப்பு வீடியோ காட்சிதான் அது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ காட்சி கீழ் உள்ள ஆதாரத்தில் உள்ள சுமார் 28 வது நிமிடத்தில் இருந்து தொடர்கின்றது.
மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்ற 11 நாட்கள் நடந்த சண்டை கடந்த 21.05.2021 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்ததிற்க்கு சுமார் 11 மாதங்களுக்கு முன்னதாக இந்த வீடியோ யூடியூபில் உள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK