FACT CHECK கோவை அரசு மருத்துவமனை புகைபடம் என பரவும் பொய்யான செய்தி: உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கோவை GH க்கு போய் பாருங்கள். ஈரக்குலை நடுங்கி விடும் தேவையின்றி வெளியில் திரியாதீர்கள்.
என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் தமிழகத்தில் உள்ள மருத்துவமனை இல்லை
மேலும் அந்த புகைபடம் தற்போது எடுக்கபட்ட புகைபடமும் இல்லை என்பது அந்த புகைபடத்தை நன்கு பார்த்தாலே தெரியும், ஏன் என்றால் அந்த புகைபடத்தில் யாரும் முககவசம் அணியவில்லை அப்படி என்றால் கொரானா காலத்திற்க்கு முன்பு எடுக்கபட்ட புகைபடம் என்பது என நன்றாக தெரிகின்றது
இந்தியாவில் கொரானா ஆரம்பம் ஆனது ஜனவரி 20 , 2021 ம் ஆண்டு ஆகும்
ஆனால் பலரும் ஷேர் செய்யுமந்த புகைபடம் கடந்த 29..08.2019 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த Surjya Kanta Mishra என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிலை அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் கோவை என பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://en.wikipedia.org/wiki/COVID-19_pandemic_in_India
அட்மின் மீடியாவின் ஆதாரம்
This is the true picture of a female non surgical ward in Burdwan Medical College and Hospitals . Imagine how govt junior and senior level doctors work in unbelievable inhuman conditions. Yet they won't have any say in #MCI pic.twitter.com/Iphnp8vMWQ
— Surjya Kanta Mishra (@mishra_surjya) August 28, 2019
Tags: மறுப்பு செய்தி FACT CHECK

