FACT CHECK :கேரளாவில் ஆம்புலன்ஸ்-யில் அனுமான் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால் ஏற மறுத்து கிறிஸ்தவ தம்பதிகள் உயிரிழப்பு என்ற செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கேரளாவில் அவசர உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ்-யில் அனுமான் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததை ஏற மறுத்து கிறிஸ்தவ தம்பதிகள் பின்னர் உயிரிழப்பு என்று ஒரு புகைபkடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இதுவரை இணையத்தில் நாம் தேடியவரையில் அது போல் எந்த செய்தியும் கிடைக்கவில்லை
மேலும் நமக்கு தெரிந்தவர்கள் மூலம் கேரளாவில் இது போல் சம்பவம் நடந்ததா என விசாரிக்கையில் அது போல் எந்த சம்பவமும் இங்கு நடக்கவில்லை என கூறினார்கள்
ஆனாலும் இந்த பொய்யான செய்தி பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் இது பற்றி பல FACT CHECK தளங்களும் ஆராய்து பொய் எனவும் செய்தி வெளியிட்டுள்ளார்கள்
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த ஆம்புலன்ஸ் புகைபடம் கடந்த மே 10-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
புகைப்படத்திற்கு கீழே பெங்களூரின் புறநகரில் செயல்படாத குவாரிக்குள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட திறந்தவெளி தகன பகுதியில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் எடுத்துச் செல்கின்றனர் ” எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே பெங்களூரில் நடந்த மயான புகைபடத்தை எடுத்து கட்டுகதைகளோடு பொய்யாக ஒரு செய்தியினை பரப்பி வருகின்றாகள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
