Breaking News

FACT CHECK: கொரானாவிற்க்கு தொழுகையில் பிராத்தனை செய்ய சொன்ன மும்பை காவல்துறை அதிகாரியை அடிக்கின்றார்கள் என பரவும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   மும்பை நகர காவல்துறை உயர் அதிகாரி என்று கூட பார்க்காமல், சங்கிகள் இப்படி அடிக்கிறார்கள். இந்த காவல் துறை அதிகாரிகள் அப்படி என்ன செய்துவிட்டார். இவர் செய்தது இஸ்லாமிய மக்களிடம் கொரானாவுக்கு உங்கள் தொழுகையில் பிராத்தனை செய்யுங்கள் என்று தாழ்மையான வேண்டுகோள் வைத்தார். அந்த காணொளி கூட சில தினங்களுக்கு முன்பு சமூக வலைய தளங்களில் பரவலாக பகிரப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும்..என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ மும்பையில் நடக்கவில்லை, மாறாக டெல்லியில் நடந்ததுமேலும் அந்த காவலரை அடிப்பது மேலே சொன்ன காரணங்களுக்காகவும் இல்லை.

அந்த காவலர் பெயர் சுஷில் ஆகும், அவர் டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல்நிலையத்தில் பணி புரிகின்றார்

அந்த காவலர் அங்கு பணி புரிவதற்க்கு முன்னதாக சஞ்சய் குப்தா என்ற தொழில் அதிபருக்கு பாதுகாப்பு பணியில் இருந்தார்

அந்த காவலரை கடந்த ஏப்ரல் 1 ம் தேதி அன்று சஞ்சய் குப்தா அவரது உறவினர் அஸ்வினியுடன் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவருடன் இருந்த குப்தாவின் சகோதரர் ரின்ங்கு மற்றும் காக்கு ஆகியோர் அந்த காவலரை அடித்தார்கள் அந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback