Breaking News

FACT CHECK: தெலுங்கானாவில் நோயாளிகளை ஆக்சிஜனை மூடி கொன்ற ஆம்புலன்ஸ் டிரைவரை அடிக்கும் காவலர்கள் வீடியோ? என பரவும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் தெலுங்கானா நிஜமாபாத் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் லைன் ஆப் பண்ணி விட்டான். போலீஸ் அவனை பிடித்து கேள்வி கேட்டபோது ரெண்டு மூணு நாளாக ஒருத்தருமே சாகவில்லை, அதனால் வேலை இல்லாமல் காசு இல்லாமல் தவிக்கிறதால செய்தேன் என்கிறான். என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


மொத்தம் 2 சம்பவங்கள் 


சம்பவம் 1

கடந்த 24.05.2021 அன்று தெலங்கானா நிஜாமாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள்  வார்டிற்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் விநியோகத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நிறுத்தி  இருக்கிறார். அதைப் பார்த்த வார்டு பாய் போலிஸாருக்கு தகவல் கொடுத்து அவனை ஒப்படைத்துள்ளார்கள் அப்போது போலிஸாரிடன் அவன் கடந்த சில நாட்களாக நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் தேவை இல்லை என்பதால் இம்முடிவை எடுத்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்து உள்ளார்.

அட்மின் மீடியா ஆதாரம் 

https://telugu.news18.com/news/telangana/nazimabad-ambulance-drivers-said-there-was-no-demand-for-corona-patients-in-the-icu-at-a-government-hospital-trying-to-stop-oxygen-vb-nzb-885978.html


ஆனால் பலரும் அந்த தெலங்கானா சம்பவத்துடன் தொடர்ப்படுத்தி ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள்

அதில் ஒருநபரை 5 போலிஸார் லத்தியால் தாக்குகின்றார்கள் ஆனால் அந்த வீடியோ  மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும் 


சம்பவம் 2
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ  சம்பவம் நடந்தது தெலுங்கானாவில் இல்லை மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது ஆகும்

பல போலிஸ்காரர்கள் அடிக்கும் அந்த நபர் மஹாராஷ்ட்டிராவில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் உள்ள பாஜக யுவ மோர்ச்சாவின் பொதுச் செயலாளராக இருக்கும் சிவ்ராஜ் நரியால்வாலே என்பவர் தான் அது மேலும் இந்த சம்பவம் நடந்தது 09.04.2021 தேதி ஆகும்

அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞன் இறந்துவிட்டதால் அவரது உறவினர்கள் மருத்துவமனை அலட்சியத்தால் தான் என  வாக்குவாதத்தில்  ஈடுபட்டார்கள் அவர்களுக்கு ஆதாரவாக சிவ்ராஜ் நரியால்வாலே மற்றும் சிலர் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டார். 

அப்போது நரியால்வாலே மருத்துவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்போது காவல்துறை வந்து சமாதானம் செய்தும் முடியாமல் ஒருகட்டத்திற்க்கு மேல் அவரை அடித்தார்கள் 

இது குறித்து அப்போது அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை அந்த வீடியோ தற்போது கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

 

அட்மின் மீடியாவின் ஆதாரம்

குறிப்பிட்ட வீடியோ காட்சிகளுக்கும், நிஜாமாபாத்தில் நிகழ்ந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று கூறி, நிஜாமாபாத் போலீசாரே  அளித்த விளக்கம் 


Tags: 

#ஆக்சிஜன் சப்ளை நிறுத்தம்

#ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

#தெலுங்கானா போலீசார் தாக்கிய காட்சி

#ambulance driver stop oxygen supply nizamabad

#ஆக்சிஜன் சிலிண்டர் லைன் ஆப் 

#தெலுங்கானாவில் ஆம்புலன்ஸ் டிரைவர்

#தெலங்கானா நிஜாமாபாத் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback